Work From Home முறையில் அலுவலக பணிகளை தொடரும் நபர்கள் தங்களது திரிலுக்காக வேலை நேரத்திற்கு நடுவே உடலுறவு மற்றும் சுய இன்பம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாக சுவாரஸ்சியமான ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
ஒர்க் ப்ரம் ஹோம் ஊழியர்கள்
கொரோனா பாதிப்புகளின் போது உலகமே முடக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் தஞ்சமடைந்த போது பெருவாரியான அலுவலகங்கள் வீட்டில் இருந்து பணியை தொடரும் ஒர்க் ப்ரம் ஹோம் முறையை ஊழியர்களுக்கு அமுல்படுத்தினார்.
ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து மீண்டும் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் பெருவாரியான நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் தற்போது ஒர்க் ப்ரம் ஹோம் முறையிலேயே செட்டிலாகிவிட்டனர்.
iStock
புதிய ஆய்வு முடிவுகள்
அலுவலகங்களுக்கு சென்று பணிபுரிந்த காலங்கள் மறைந்து தற்போது ஒர்க் ப்ரம் ஹோம் என்ற முறைக்கு மாறியுள்ள மக்கள், தங்கள் வேலை நேரத்திற்கு நடுவே உடலுறவு மற்றும் சுய இன்பம் போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவதாக சுவாரஸ்சியமான ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியாவின் செக்சுவல் வெல்னஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் ஒர்க் ப்ரம் ஹோம் முறையில் பணிபுரியும் 49% பிரித்தானிய மக்கள் தங்கள் வேலை நேரத்திற்கு மத்தியில் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இப்படி சுய இன்பம் செய்வதன் மூலம் தங்களது மன அழுத்தம் குறைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Getty
அத்துடன் 38 சதவிகித மக்கள் வேலை நேரத்திற்கு நடுவே உடலுறவு கொள்வதாகவும், அதிக நேரம் வீட்டிலேயே இருப்பதால் தங்களுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்று நினைக்க தோன்றும் காரணத்தால் உடலுறவு கொள்வதாக 68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஆய்வில் வேலைக்கு நடுவே இதனை செய்தால் ஏற்படும் திரில் காரணமாக உடலுறவிலோ அல்லது சுய இன்பத்திலோ ஈடுபடுவதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
திரிலுக்காக இதை செய்யும் முறையில் 39 சதவிகிதம் பேர் பெண்களும், 32 சதவிகிதம் பேர் ஆண்களும் உள்ளனர்.
ஆண்களே அதிகம்
இந்த ஆய்வறிக்கையில் பிரித்தானியாவில் எத்தனை பேர் வேலை நேரத்தில் உடலுறவு கொள்கிறீர்கள் என்று கேள்வியும் கேட்கப்பட்டது.
Getty
இதில் பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகமான எண்ணிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
34 சதவிகித பெண்கள் வேலை நேரத்தில் உடலுறவு கொண்டு இருந்தார்கள் என்றால் ஆண்கள் மொத்தமாக 43 சதவீதம் பேர் உடலுறவு கொண்டுள்ளனர்.
இதற்கு ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது, உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது அதனால் வேலை நேரத்தில் உடலுறவு கொள்வதாக காரணமும் தெரிவித்துள்ளனர்.