Sorry மாமா நான் போய் சேர்ந்திடுவேன்! அம்மாவை பார்த்துக்கோ.. தற்கொலைக்கு முன் இளம்பெண் வெளியிட்ட வீடியோ


தமிழக மாவட்டம் திருப்பத்தூரில் இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலை முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமால்.

இவரது இளைய மகள் சரண்யா (23) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த சரண்யாவை அவரது தாய் அதட்டியுள்ளார்.

இதனால் கடந்த 11ஆம் திகதி சரண்யா குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அறிந்த சரண்யாவின் உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலருடன் பிணக்கு

அவர் பதிவு செய்த வீடியோ மூலம் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. புதுப்பேட்டை அனுசாகரம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்ற நபரை சரண்யா மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றி வரும் அருண் கடந்த 15 நாட்களாக சரண்யாவிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பல நாட்களாக சரண்யா மனவிரக்தியில் இருந்துள்ளார்.

Sorry மாமா நான் போய் சேர்ந்திடுவேன்! அம்மாவை பார்த்துக்கோ.. தற்கொலைக்கு முன் இளம்பெண் வெளியிட்ட வீடியோ | 23 Old Girl Suicide After Record Video To Lover

தற்கொலைக்கு முன் வீடியோ

இந்த நிலையில் தான் தற்கொலை முடிவுக்கு முன் அவர் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘Sorry மாமா நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன்.

நான் இனிமே கண்டிப்பாக திரும்பி வரமாட்டேன். அவ்வளவு தான் நான் போய் சேர்ந்து விடுவேன்.

நல்லபடியாக சந்தோஷமா இரு மாமா. அம்மாவை பார்த்துக்க.

நான் உன்னை எவ்வளவு Love பண்ணேன் என்பதை உனக்கு புரிய வைத்தேன்.

உனக்கு புரியாமல் நீ உன் பாட்டுக்கு பேசிட்ட.. நான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். நல்லபடியா சந்தோஷமா இரு.. இனிமேல் நான் உன் வாழ்க்கையில் இல்லை.. அவ்வளவு தான் போய் சேர்ந்து விடுவேன்’ என பேசியுள்ளார்.

இந்த வீடியோவை சரண்யா தனது காதலருக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையில், சரண்யாவின் சகோதரி கார்த்திகா பொலிஸில் அளித்துள்ள புகாரில் , தன் தங்கையின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், அவரது உடலை ஒப்படைக்கும் விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.