இந்தியாவை உலுக்கிய கொடூர வழக்கில் தாய்-மகன் பகீர் வாக்குமூலம்


மகனின் உதவியுடன் கணவனை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி குப்பைகளில் வீசிய பெண்ணின் வழக்கில், தாய்-மகன் இருவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், பாண்டவ் நகரில் நடந்த கொலை தொடர்பான கொடூரமான தகவல்களை டெல்லி பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட அஞ்சன் தாஸ் ஜூன் மாதம் ஷ்ரதா வாக்கர் கொல்லப்பட்டதைப் போன்றே அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகனால் கொல்லப்பட்டார்.

பொலிஸ் விசாரணை

தாஸ் தனது நகைகளை விற்று பணத்தை தனது முதல் மனைவிக்கு அனுப்பியதால் குற்றம் சாட்டப்பட்ட பூனம் கோபமடைந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தியாவை உலுக்கிய கொடூர வழக்கில் தாய்-மகன் பகீர் வாக்குமூலம் | Wife Son Confession Delhi Murder Case PoliceDelhi Police / ANI

முன்னாள் மனைவியின் மகன் தீபக் உடன் கொலைத் திட்டத்தை தீட்டினாள். தாஸ் தனது மனைவியை துன்புறுத்தியதால் இந்த கொலைத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக தீபக் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

வாக்குமூலம்

தாஸை ஜூன் மாதம் கொன்றதாக இருவரும் கூறியுள்ளனர். தாஸின் குடிப்பழக்கத்தை பயன்படுத்திக்கொண்ட அவர்கள் முதலில் அவரை குடிக்கவைத்துள்ளனர். பின்னர் அவர் மயக்கமடைந்தவுடன் அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

இரவு முழுவதும் உடலில் இருந்து இரத்தத்தை வெளியேற விட்டு, காலையில் உடலை 10 துண்டுகளாக வெட்டி, பாலித்தீன் பைகளில் போட்டு குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்ததாக இருவரும் தெரிவித்தனர்.

இந்தியாவை உலுக்கிய கொடூர வழக்கில் தாய்-மகன் பகீர் வாக்குமூலம் | Wife Son Confession Delhi Murder Case PoliceDelhi Police

அடுத்த சில நாட்களில், அவர்கள் துண்டுகளை தூக்கி எறிந்தனர். இதுவரை 6 துண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். \

பின்னர் துர்நாற்றம் வீசாமல் இருக்க வீட்டையும் குளிர்சாதன பெட்டியையும் சுத்தம் செய்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

யாருக்கும் தெரிவிக்காமல் தாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.