உதகையிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லக்கூடிய கல்லட்டி மலைப்பாதையில் நாள்தோறும் கர்நாடக கேரளா பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். மலைப்பாதையில் அவ்வப்போது யானை, சிறுத்தை ,கரடி ,காட்டுமாடு, உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும் குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் சாலையில் திடீரென உலா வருவது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று சாலையில் முகாமிட்டது இதனால் கர்நாடக செல்லும் வாகனங்களும் அதேபோல் முதுமலை பகுதியில் இருந்து உதகையை நோக்கி வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நின்றன.
நீண்ட நேரமாக வாகனங்களுக்கு வழி விடாமல் காட்டு யானை சாலையிலேயே நின்றதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர் யானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னரே சுற்றுலா பயணிகள் நிம்மதியுடன் மலைப்பாதையில் பயணித்தனர்.