தமிழ்நாடு பிராமண சங்கத்தின் 13 வது மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில மூத்த ஆலோசகர் ஸ்ரீ ராமன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஏழை மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா போல தமிழகத்தில் பொருளாதார ரீதியான பின்தங்கிய நலிந்த பிராமண சமூக முன்னேற்றத்திற்கும் தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் நீதிமன்ற ஆலோசனைப்படி தக்கார் நியமனத்தில் பிராமண சமுதாயத்தில் தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் 2021-2021 ஆண்டிற்கான அறிக்கையையும் நிதிநிலை அறிக்கைகளையும் தாக்கல் செய்யப்பட்டது.