நியூயார்க்: ஐ.நா. தலைமையக வளாகத்தில் தேச தந்தை மகாத்மா காந்தி மார்பளவு சிலை திறக்கப்படுகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா விரைவில் ஏற்க உள்ளது. இதையொட்டி தேச தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிலை ஐ.நா. தலைமை அலுவலக வளாகத்தில் அடுத்த மாதம் நிறுவப்படுகிறது. இதன் விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கலந்து கொள்கிறார். ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ,இந்திய வெளியுறவு அமைச்சர், மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி மார்பளவு சிலை இடம்பெறுவது இதுவே முதல் முறை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement