கடலில் விழுந்த காதல் மோதிரம்…முத்தமிட்டு சிரித்து உருண்ட காதலி: உடனே தண்ணீரில் குதித்த காதலன்!


காதல் அறிவிப்பின் போது நிச்சயதார்த்த மோதிரம் தண்ணீரில் தவறி விழுந்து விட சற்றும் தாமதிக்காமல் கடலில் மூழ்கி மோதிரத்தை மீட்ட காதலனுக்கு காதலி அன்பு முத்தத்துடன், காதல் சம்மதம் தெரிவித்த நிகழ்வு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


வைரல் வீடியோ

காதலியிடம் விமானத்தில் இருந்து குதித்து கொண்டே காதல் முன்மொழிவு செய்வது, நடுக் கடலுக்குள் மூழ்கி காதலிக்கு காதல் முன்மொழிவை தெரியபடுத்துவது போன்ற வித்தியாசமான முறைகளை சமீபத்தில் காதல் வசப்பட்ட இளைஞர்கள்  நிகழ்த்தி வருகின்றனர்.

ஆனால் சமீபத்தில் பேஸ்புக்கில் ஸ்காட் க்ளைன் என்ற நபர் பகிர்ந்துள்ள வீடியோவில், காதல் முன்மொழிவு ஏற்பாடுகள் சற்று சாதாரணமாக இருந்தாலும், அவை நொடி பொழுதில் அசாதரணமானதாகவும், வேடிக்கை நிறைந்ததாகவும் மாறி காதலன் காதலி இருவருக்குமே வாழ்வில் மறக்க முடியாத தருணமாய் மாறி உள்ளது.

அதில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஸ்காட் க்ளைன் என்ற நபர், தனது காதலி சுசி டக்கருடன் சேர்ந்து படகில் நின்று கொண்டு அழகிய சூரிய அஸ்தமன காட்சிகளை ரசித்து கொண்டு இருந்தனர்.

அப்போது அதை சரியான தருணம் என்று கருதிய காதலன் ஸ்காட் க்ளைன், தனது ஷார்ட்ஸ் பாக்கெட்டில் இருந்து மோதிர பெட்டியை எடுத்து நீட்ட முற்பட்டார்.
ஆனால் ஸ்காட் மோதிர பெட்டியை வெளியே எடுக்கும் போது அது அவரது கையில் இருந்து நழுவி கடலுக்கு விழுந்தது.

இருப்பினும் ஒரு நொடி கூட தாமதிக்காத காதலன், கடலில் மூழ்கி மோதிர பெட்டியை கையில் பிடித்த படி  தண்ணீரில் இருந்து வெளியே தென்பட்டான்.

கடலில் விழுந்த காதல் மோதிரம்…முத்தமிட்டு சிரித்து உருண்ட காதலி: உடனே தண்ணீரில் குதித்த காதலன்! | Florida Scott Clyne Drops Engagement Ring In SeaSuzie Tucke-சுசி டக்கர்

பிறகு இந்த காட்சிகளை படம் பிடித்து கொண்டு இருந்த நண்பர் ஒருவர், க்ளைனிடம் இருந்து மோதிர பெட்டியை வாங்கி பாதுகாப்பாக வைத்து விட்டு நண்பனை கப்பலுக்குள் இழுத்தார்.

சிரிப்புடன் சம்மதித்த காதலி

 ஒருவழியாக நிம்மதி பெருமூச்சுடன் கப்பலுக்குள் ஏறிய காதலன் மீண்டும் காதலி சுசி டக்கருடம் மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி தனது காதலை வெளிப்படுத்தினார்.

கடலில் விழுந்த காதல் மோதிரம்…முத்தமிட்டு சிரித்து உருண்ட காதலி: உடனே தண்ணீரில் குதித்த காதலன்! | Florida Scott Clyne Drops Engagement Ring In SeaScott Clyne & Suzie Tucker – ஸ்காட் க்ளைன் & சுசி டக்கர்

அப்போது அதிர்ச்சியும், சந்தோஷமும் கலந்த நிலையில் இருந்த காதலி அந்த தருணத்தை நினைத்து சிரித்து கொண்டே காதலனுக்கு முத்தமிட்டதோடு காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.

“இந்த சம்பவம் 100% உண்மையானது. 100% என் அதிர்ஷ்டம். 100% மறக்க முடியாது” என்று ஸ்காட் க்ளைன் பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.