சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவி விலகு: ஷாங்காய் போராட்டத்தில் பொலிஸாருடன் மக்கள் மோதல்!


சீனாவில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கோவிட் கட்டுபாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன மக்கள் மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர், இதில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்ற போராட்டத்தில் சீன பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பரபரப்பு அதிகரித்துள்ளது.

சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கை

உலக அளவில் கோவிட் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், கோவிட் தொற்று முதலில் பரவ தொடங்கிய நாடான சீனாவில் அவ்வப்போது கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பூஜ்ஜிய கோவிட் பாதிப்பு கொள்ளையை சீனா முழுவதும் அமுல்படுத்துவதாக அறிவித்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவி விலகு: ஷாங்காய் போராட்டத்தில் பொலிஸாருடன் மக்கள் மோதல்! | Protests In China With Zero Covid FatigueAP

அதனடிப்படையில் கோவிட் பாதிப்புகள் அதிகரிக்கும் நகரங்கள் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு மக்கள் அனுமதியின்றி வெளி வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, உரும்கியின் நான்கு மில்லியன் குடியிருப்பாளர்கள் பலர் ஆகஸ்ட் முதல் எந்த காரணத்திற்காகவும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உரும்கி நகர தீ விபத்து

கடந்த வியாழக்கிழமை சீனாவின் தொலைதூர வடமேற்கு நகரமான உரும்கியில் உள்ள கோபுர குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, இந்த தீ விபத்தில் 10 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவி விலகு: ஷாங்காய் போராட்டத்தில் பொலிஸாருடன் மக்கள் மோதல்! | Protests In China With Zero Covid FatigueAP

ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் பூஜ்ஜிய கோவிட் கொள்கையின் காரணமாகவே தீ விபத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் 10 பேர் வரை உயிரிழந்தாக அஞ்சப்படுகிறது.

உயிரிழப்புகளை கோவிட் கட்டுப்பாடுகள் தான் ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டை சீன அதிகாரிகள் மறுத்தாலும், உரும்கியில் உள்ள அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் அசாதாரண மன்னிப்புக் கோரினார், மேலும் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதன் மூலம் ஒழுங்கை மீட்டெடுப்பதாக உறுதியளித்தனர்.

சீனாவில் வெடித்த மக்கள் போராட்டம்

உயிரிழப்புகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஹாங்காய் உள்ள வுலுமுகி சாலையில் மக்கள் மெழுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

சிலர் வெள்ளை பதாகைகளை ஏந்தி கொண்டு, சிலர் சீன அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷாங்காய் நகரில் சனிக்கிழமை இரவு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் “ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவி விலகு” மற்றும் “கம்யூனிஸ்ட் கட்சியே பதவி விலகு” போன்ற முழக்கங்களை வெளிப்படையாகக் கூவினர்.

இந்த போராட்டம் சுமார் 50 பல்கலைக்கழகங்களுக்கு பரவியுள்ளதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போராட்டம் தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து மக்கள் மீது சீன பொலிஸார் தடியடி மற்றும் பெப்பர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட முற்றப்பட்டனர்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை மக்கள் மீண்டும் ஷாங்காய் தெருக்களில் கூடி அஞ்சலி செலுத்த குவிந்து வருவது குறிப்பிடத்தக்க துணிச்சல் நடவடிக்கை என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் விவரித்துள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போராட்டத்தின் போது பொது மக்களுக்கும் சீன பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டம் தொடர்பாக நபர் ஒருவர் தெரிவித்த கருத்தில் எங்கள் அடிப்படை மனித உரிமைகளை நாங்கள் விரும்புகிறோம், என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் இத்தகைய போராட்டங்கள் ஒரு அசாதாரண காட்சியாகும், அங்கு அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நேரடியாக விமர்சித்தால் கடுமையான தண்டனைகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.