கும்பகோணம் அருகில் உள்ள திலயம்பூர் பகுதியில் லட்சுமி – கோவிந்தராஜ் என்ற தம்பதிக்கு ராஜேந்திரன் எனும் மகன் இருக்கின்றார். ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த ராஜேந்திரன் சில நாட்களுக்கு முன் தாய் மற்றும் தந்தை இருவரையும் கொலை செய்துவிட்டு அந்த உடல்களை வீட்டில் வைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
அத்துடன் அதே வீட்டில் சமைக்கும் சாப்பிட்டு வந்துள்ளார். அந்த வழியே நடந்து சென்ற பொது மக்களுக்கு மோசமான துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அவர்கள் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ராஜேந்திரன் அங்கு இருப்பதை கண்டனர். அத்துடன் ரத்த கரை படிந்த கத்தியும் இருந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் தாய் தந்தையை கொலை செய்ததால் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும், போலீசார் மோப்ப நாயை கொண்டு வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். பெற்ற தாய், தந்தையை மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.