OPS-ஐ சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயார்! ஆனால்… – ஆர்.பி. உதயகுமார் வைத்த செக்

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினி திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்துடன் மேலும் 50 ஜோடிகளுக்கும் திருமண நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கே.சுப்பையாபுரத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார், கருப்பசாமி திருக்கோவிலில் ஆர்.பி.உதயக்குமார் தனது குடும்பத்தினருடன் மகளின் திருமண அழைப்பிதழை வைத்து நேற்று (நவ. 27) பூஜை செய்தார். 

இதையெடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை உங்கள் அணியோடு இணைத்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு,”அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வழிநடத்த உறுதி எடுத்து நாங்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அந்த பயணத்தில் எல்லோரையும் அழைக்கிறோம். 

எல்லோரையும் சிவப்பு கம்பளம் விரித்து வருக, வருக என வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை. ஆனால் ஊடகங்களில் வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு திரித்து கூறும் நிலை உள்ளது. தாய் உள்ளத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் அரவணைத்து செல்வதாகதான் இருக்கிறார். அதில் எவ்வித மாற்றுக்கருத்துகளும் இல்லை. 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று அதிமுகவை வெற்றி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே 2 பேர் தலைமையாக இருந்து எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. கொங்கு மண்டலத்தில் 100 சதவீதம் வெற்றி கிடைத்தது. ஆனால் தென் மாவட்டங்களில் கிடைக்கவில்லை. இதற்கு ஆயிரம் காரணங்களை சொல்ல முடியும். 

ஆகையால் காலத்திற்கேற்ப முடிவு எடுத்தால்தான் இயக்கத்தினை காப்பாற்ற முடியம் என்ற தொண்டர்களின் கருத்தினை தான் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. தனிப்பட்ட கருத்தின் படி எடுக்கவில்லை” என்றார்.

முன்னதாக, வரும் டிச. 5ஆம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் கூடதல் போலீஸ் பாதுகாப்பு கேட்டு இபிஎஸ் தரப்பில் ஜெயக்குமார் சென்னை போலீசாரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார். அன்றைய தினம், ஜெயலலிதா நினைவிடத்தில் தலைவர்கள் உறுதிமொழி எடுக்க உள்ளதாகவும், அவரின் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | காலவதியாகும் ஆன்லைன் ரம்மி மசோதா… பெண் தற்கொலை
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.