அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இரண்டு இந்திய மாணவர்கள்., ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்


அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் நீரில் மூழ்கி இரண்டு இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர்.

மிசோரியில் உள்ள ஓசர்க்ஸ் ஏரியில் இரு மாணவர்களும் குளிக்கச் சென்றபோது, ​​சனிக்கிழமையன்று இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

மரண அறிக்கையின்படி, ஒரு மாணவர் நீரில் மூழ்கியதால் இறந்ததாகவும், இரண்டாவது மாணவர் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள்

Indian students US

உயிரிழந்தவர்கள் இருவரும் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 24 வயது உத்தேஜ் குன்டா (Uthej Kunta) மற்றும் 25 வயது சிவா கெல்லிகாரி (Shiva Kelligari) என அடையாளம் காணப்பட்டனர்.

இருவரும் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வந்தனர். இருவரும் Airbnb-ல் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

சடலங்கள் மீட்பு

சனிக்கிழமை மதியம், உத்தேஜ் குன்டா முதலில் குளிக்க சென்றதாகவும், ஆனால் அவர் திரும்பி வராததால், சிவா ஏரியில் குதித்து அவரைக் காப்பாற்ற முயன்றதாகவும், ஆனால் இருவரும் திரும்ப வரவில்லை என்றும் காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இரண்டு இந்திய மாணவர்கள்., ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சோகம் | Two Indian Students Telangana Drown Us LakeIndia.com

பிற்பகல் 2:20 மணிக்கு Airbnb-ன் மேலாளர் உதவிக்காக பொலிசாரை அழைத்ததைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குன்டாவின் உடலை மீட்டுள்ளனர்.

தொடந்து மீட்பு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், ஒரு நாள் கழித்து தான் சிவாவின் உடல் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா அமைச்சர் இரங்கல்

 இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராவ் ஒரு ட்வீட்டில் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார், மேலும் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர குடும்பத்தினருக்கு தனது குழு உதவுவதாகக் கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.