புதுடில்லி,:அ.தி.மு.க., பொதுக்குழு விவகாரத்தில் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வரும் 6ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் பழனிசாமி நடத்திய பொதுக்குழுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார்.இது தொடர்பான விசாரணை டிச.,6க்குஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பன்னீர் செல்வம் தரப்பில் நேற்று தாக்கல் செய்த மனுவில், ‘மேலும் சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிரு-ப்பதால் விசாரணையை டிச.,13க்கு ஒத்திவைக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் கட்சிப் பணிகள் தடைபட்டுள்ளன. எனவே, விசாரணையை தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் நடத்த வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப் பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்து, ஏற்கனவே அறிவித்தபடி டிச., 6ல் விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement