ஊழல் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தமிழகம் முழுவதும் கடந்த 1983 ஆண்டு முதல் 2021 வரை நிலுவையில் இருக்கும் 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியரான அண்ணாதுரை என்பவர் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இதுவரை நிலுவையிலுள்ளது. இதேபோல், அரசு ஊழியர்கள் பலர் தொடர்ந்த வழக்குகளும் தற்போது வரை நிலுவையிலுள்ளன.

இந்நிலையில், இந்த வழக்குகள் தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, “அவசியம் இல்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்கக்கூடாது” என்று அறிவுறுத்தினார். 

மேலும், ஊழல் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் இருந்தால், நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாது; இவ்வாறு இருந்தால் குற்றம் செய்தவர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக கடந்த 1983 முதல் 2021 ஆண்டு வரை நிலுவையிலுள்ள சுமார் 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.