கத்தாரின் ஆடை விதிகளை மீறும் மிஸ் குரேஷிய அழகி: செல்பி எடுத்து மகிழும் கால்பந்து ரசிகர்கள்!


உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகள் மோதும் கால்பந்து போட்டிக்காக வேல்ஸ் ரசிகர்கள் இருவர் கத்தார் தெருக்களில் சென்ற போது  முன்னாள் மிஸ் குரேஷிய அழகி இவானா நோல் உடன் இணைந்து செல்பி எடுத்து கொண்டு உற்சாகமடைந்தனர்.

கத்தாரின் ஆடை கட்டுப்பாடு

உலக கோப்பை கால்பந்து தொடரில் கலந்து கொள்ளும் பெண்கள் ஆடை கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என சில விதிமுறைகளை கத்தார் அரசு அறிவித்து இருந்தது.

Ivana KnollIvana Knoll-இவானா நோல்(Instagram) 

இதற்கு கால்பந்து அமைப்பில் உள்ள நாடுகள் மற்றும் உலகளாவிய கால்பந்து ரசிகர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து பெரும் சர்ச்சை வெடித்தது.


விதிகளை மீறும் முன்னாள் மிஸ் குரோஷியா

இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக கத்தார் வந்து இறங்கியுள்ள முன்னாள் மிஸ் குரேஷிய அழகி இவானா நோல், தான் தோஹாவிற்கு வந்து இறங்கியதிலிருந்து தனது ஆடைகளின் காரணமாக நகரின் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளார்.

குறிப்பாக ஜி-ஸ்ட்ரிங் அணிந்து கத்தார் நகரின் நீர் முனைகளில் நடந்து சென்றதை காட்டிய பிறகு, 30 வயதான அவர் கத்தார் பழக்கவழக்கங்களை “அவமரியாதை” செய்வதாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

]Ivana Knoll-இவானா நோல்Ivana Knoll-இவானா நோல்

பல்வேறு விமர்சனங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வெளிவந்த பிறகும் இவானா நோல் அதை விடாமல், சிறிது நேரத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் சிறிய ஸ்பாகெட்டி-ஸ்ட்ராப் பிகினி அணிந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டார்.

மேலும் செவ்வாய்கிழமையான இன்று நடைபெறும் இங்கிலாந்து வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக வெளியே வந்துள்ள முன்னாள் மிஸ் குரோஷியா இவானா நோல், கத்தாரின் கண்டிப்பான பழமைவாத ஆடைக் குறியீட்டை மீறிய ஆடைகளுடன் இரண்டு வேல்ஸ் ரசிகர்களின் செல்பி புகைப்படத்தில் இணைந்துள்ளார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.