கத்தார் உலக கோப்பையில் சென்று கலக்கிய தமிழகத்தை சேர்ந்த 9 பேர்! நெகிழ்ச்சி தகவல்


கத்தார் வரையில் சென்று கால்பந்து உலக கோப்பையில் பங்கேற்று கலக்கியுள்ளனர் சென்னையை சேர்ந்த வீரங்கனைகள்.

கத்தார் உலக கோப்பை

FIFA உலக கோப்பை கால்பந்து திருவிழாவை உலகமே கொண்டாடி வருகிறது.
இந்த திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும் தெருவோர குழந்தைகளுக்கென உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையை சேர்ந்த கருணாலயா தொண்டு நிறுவனத்தின் மூலம் 9 தெருவோரக்குழந்தைகள் கத்தார் பறந்தனர்.
அங்கு உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.

கத்தார் உலக கோப்பையில் சென்று கலக்கிய தமிழகத்தை சேர்ந்த 9 பேர்! நெகிழ்ச்சி தகவல் | Fifa Worldcup Football Chennai Girl Players

வீடற்ற குழந்தைகளின் புகலிடம்

தாய் தந்தையரை இழந்த, வீடற்ற குழந்தைகளின் புகலிடமாக திகழ்வது தெருக்கள்தான். தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் தங்கள் அடையாளத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், தங்கள் மீதான பார்வையை மாற்றுவதற்காகவும் அவர்களுக்கான உலகக் கோப்பை தொடர் களமாக அமைகிறது.

இது குறித்து அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கி கத்தார் அழைத்துச்சென்ற கருணாலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பால் சுந்தர் கூறுகையில், உரிமையை மீட்டெடுக்கும் போராட்ட களத்தில் காலிறுதிவரை சென்ற இவர்களின் சாதனை இந்தியாவில் கால்பந்து வீரர்களின் திறமையை சர்வதேச அரங்கில் நிலைநாட்டியுள்ளது என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.