காலிமுகத்திடல் பகுதியிலிருந்து சடலம் மீட்பு


கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று (28.11.2022) மாலை மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடல் பகுதியிலிருந்து சடலம் மீட்பு | Dead Boady Found In Galleface

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 27ஆம் திகதி தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் அவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உறவினர்களால் சடலம் அடையாளம்

காலிமுகத்திடல் பகுதியிலிருந்து சடலம் மீட்பு | Dead Boady Found In Galleface

உயிரிழந்தவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.