சிரஞ்சீவிக்கு திரைப்பட ஆளுமை விருது : மத்திய அமைச்சர் வழங்கினார்

இந்தியாவிலேயே மிகப்பெரிய திரைப்பட விழாவான கோவா சர்வதேச திடைப்பட விழா கடந்த 20ம் தேதி தொடங்கியது. இதில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்பட்டது. இந்த விழாவை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் கோவா மாநில அரசு இணைந்து நடத்தியது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் ஆந்திர திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவிக்கு 2022ம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வழங்கி கவுரவித்தார.

நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சிரஞ்சீவி அதுகுறித்து கூறும்போது “கொனிடேலா சிவசங்கர வரபிரசாத் என்ற பெயரில் என்னைப் பெற்றெடுத்த என் பெற்றோருக்கும், சிரஞ்சீவியாக எனக்கு மறுபிறவி கொடுத்த தெலுங்குத் திரையுலகுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். சினிமா துறைக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருக்கிறேன்”என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.