புதுடில்லி: சில்லரை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் நாணயம் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நாம் தினசரி பயன்படுத்தும் பணம் என்பது பேப்பர் வடிவிலும் உலோக நாணய வடிவிலும் உள்ளது. இதே போல டிஜிட்டல் கோட்கள் (Digital Code) மூலம் உருவாக்கப்படுவது டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி என்று கூறப்படுகிறது. காகித பணத்திற்கு சமமாக இந்த டிஜிட்டல் பணமும் மதிக்கப்படும்.
இந்த நிலையில் சில்லரை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் நாணயம் டிசம்பர் 1ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) அறிவித்துள்ளது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் நாணயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மும்பை, டில்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. விரைவில் இந்தமுறை பரிவர்த்தனையில் பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, கொடாக் மகேந்திரா வங்கியும் இணைய உள்ளன.
தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்கள், கரன்சிகள் மதிப்பில் டிஜிட்டல் நாணயம் இருக்கும் எனவும், டிஜிட்டல் டோக்கன் வடிவில் டிஜிட்டல் நாணயம் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement