தலைமை நிர்வாகிகள் நியமனம்: திமுக பொதுச் செயலாளர் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் குழுத் தலைவர்களை நியமித்து, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. கட்சியின் தலைமை செய்தித் தொடர்பு தலைவராக முன்னாள் எம்.பி. டிகேஎஸ்.இளங்கோவன், துணைத் தலைவர்களாக பி.டி.அரசகுமார், புதுக்கோட்டை ஆண்டாள் பிரியதர்ஷினி, செயலாளராக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சட்டதிட்ட திருத்தக் குழுச் செயலாளராக இரா.கிரிராஜன் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, தீர்மானக் குழுத்தலைவராக கவிஞர் தமிழ்தாசன், சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவராக அறந்தாங்கி ராசன், செயலாளராக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை தேர்தல் பணிக்குழுத் தலைவர்களாக ராஜ கண்ணப்பன், புரசை ப.ரங்கநாதன், நெசவாளர் அணித் தலைவராக நள்ளியூர் ராஜேந்திரன். விவசாய அணித் தலைவராக என்.கே.கே.பெரியசாமி, விவசாய தொழிலாளர் அணித் தலைவராக திருவாரூர் உ.மதிவாணன், தொண்டரணித் தலைவராக ஜி.சுகுமாரன், மீனவர் அணித் தலைவராக இரா.பெர்னார்டு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிடர் நலக் குழுத்தலைவராக க.சுந்தரம், துணைத்தலைவராக அமைச்சர் மா.மதிவேந்தன், கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவராக முன்னாள் எம்எல்ஏ வாகை சந்திரசேகர், இலக்கிய அணித் தலைவராக புலவர் இந்திரகுமாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுத் தலைவராக முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், வர்த்தகர் அணித் தலைவராக எஸ்.என்.எம்.உபயதுல்லா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.