
நயன்தாராவின் ‛கோல்டு' சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது
நேரம், பிரேமம் போன்ற படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். தற்போது மலையாளத்தில் இவர் இயக்கி உள்ள படம் கோல்டு. இந்த படத்தில் பிருத்விராஜ் – நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன இந்தபடம் இப்போது டிசம்பர் ஒன்றாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோல்டு படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்திருப்பதாகவும், படத்தின் ரன்னிங் டைம் 165 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிருத்விராஜிற்கு இணையாக நயன்தாராவும் முக்கிய ரோலில் நடித்திருப்பதால் இந்த படம் கேரளாவைப் போன்று தமிழ்நாட்டிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.