மயான டீக்கடை! 26 கல்லறைகளுக்கு நடுவில் கல்லா கட்டும் டீக்கடை

Gujarat Grave Restaurant: குஜராத் மாநிலத்தில், தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று பிரதான கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அளித்துள்ளன. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்காளர்களை கவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பெரிய அளவிலான வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. ஒருபுறம் பாஜகவுக்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சவால் இருக்கும் நிலையில், பாஜகவின் கோட்டையில் கால் பதிக்க காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஆயத்தமாகி வருகின்றன. குஜராத் தேர்தல் என்றால் டீக்கடை என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்படும் என்பது பல ஆண்டுகளாக தொடர்கிறது.

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும். குஜராத்தில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அகமதாபாதில் உள்ள ஒரு டீக்கடை, மயானத்தில் அமைந்திருக்கிறது என்ற தகவல் தற்போது வைரலாகிவருகிறது. 

தேநீர், தேர்தல் பணியில் மூழ்கி உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்றால், கல்லறை தேநீர் கடை என்பது ஆச்சரியத்தை ஏற்படும். அலுவலகமோ, கடையோ, வீடுகளோ, ஊரின் மூலையோ, தெரு ஓரமோ எங்கிருந்தாலும், அங்கு தேநீர் பிரியர்களின் வரவு இருக்கும் என்றாலும், மயான டீக்கடைக்கு மக்கள் வருவார்களா என்ற கேள்வி எழுகிறது.

கல்லறை டீக்கடை என்பதைப் பற்றியும், அங்கு அமர்ந்து தேநீர் அருந்துவது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் அகமதாபாத் மக்களுக்கு இது இயல்பான விஷயம். அகமதாபாத் நகரில் கல்லறையில் கட்டப்பட்ட டீக்கடையில் ஏராளமான மக்கள் தினமும் தேநீர் அருந்துகிறார்கள்.

26 கல்லறைகள் இந்த டீக்கடையில் அமைந்துள்ளன. 1950ஆம் ஆண்டில் இங்கு கட்டப்பட்ட இந்த டீக்கடைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வந்துள்ளார் என்று டீக்கடையின் உரிமையாளர் ரசாக் மன்சூரி கூறுகிறார், இங்குள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் டீ பருகுகின்றனர்.

தேர்தல் பிரச்சாகரர்கள் மட்டும் இங்கு வருவதில்லை. ஒரு தொலைகாட்சி சீரியல் (தாரக் மேத்தா சீரியல்) படப்பிடிப்பும் இந்த வரலாற்று சிறப்புமிக்க கடையில் நடைபெற்றது என்று டீக்கடை உரிமையாளர் கூறுகிறார். 

பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைனும் ‘தி நியூ லக்கி ரெஸ்டாரன்ட்’க்கு தேநீர் அருந்த வருவார். இந்த உணவகத்தின் ரசிகரான அவர், இந்த இடத்தில் அமர்ந்து பல ஓவியங்களை வரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.