100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?.. ஷாக் நியூஸ்; பாகம்-2

மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று, தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த பணி தொடங்கப்பட்டு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

மேலும், தற்போது வரை தமிழகத்தில் 15 லட்சம் பேர் ஆதார் எண்களை இணைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பது குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.

அதாவது அதிக அளவிலான மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு அரசு வழங்கும் இலவச 100 யூனிட் மின்சாரம் இனி கிடையாது. அவை ரத்து செய்யப்படும் என, சில தகவல்கள் பரவி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேட்டி பாகம்-1ல் கூறப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் லிங்க்கில் அது குறித்து விரிவாக காணலாம்.

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?.. ஷாக் நியூஸ்; பாகம்-1 ன் தொடர்ச்சி:

மின்வாரியத்தின் கடன் ரூபாய் 1.59 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் வட்டி மட்டும் 16 ஆயிரத்து 511 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. மின் வாரிய சேவையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் வேண்டும். எந்தெந்த இடங்களில் இழப்பு ஏற்படுகிறது? என்று கண்டறிந்தால் தான் சரி செய்ய முடியும் ’ என தெரிவித்து உள்ளார்.

அரசு வழங்கும் இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு தைரியம் சொல்லிவிட்டாலும் உண்மையில் இது ஒரு ஏமாற்று நாடகம் என்றே மின்வாரிய ஊழியர்களே கருத்து தெரிவித்துள்ளது தமிழக அரசின் முகத்திரையை கிழிக்கும் விதமாகவே உள்ளது.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது என்பதே மக்களிடம் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்க தான்.

அதாவது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் முடிந்ததும் ஒரு நபர் 100 யூனிட் மின்சாரத்தை மட்டுமே இலவசமாக பெற முடியும் என்று உத்தரவு போடுவார்கள்.

எப்படி என்றால் ஒருவருக்கு 10 வீடுகள் இருக்கும்பட்சத்தில் ஒரு வீட்டுக்கு மட்டும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்கிற சலுகை தரப்படும். மீதம் உள்ள 9 வீடுகளிடம் இருந்து சலுகை பறிக்கப்படும்.

அடுத்ததாக ஒரு வாடகை குடியிருப்பில் 10 வீடுகள் இருக்கும்பட்சத்தில் வீட்டின் உரிமையாளரை தவிர மீதம் உள்ள 9 வீடுகளில் இருப்பவர்களிடம் இருந்து 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்கிற சலுகை அதிரடியாக பறிக்கப்படும்.

மின்வாரிய கடன் ரூபாய் 1.59 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் வட்டி மட்டும் 16 ஆயிரத்து 511 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மின் வாரிய சேவையை மேலும் நவீனப்படுத்தவும் வேண்டும் என்று சொல்வது எல்லாமே இலவசத்தை பறிப்பதற்காகவே.

அரசின் உத்தரவு எங்கே போய் எங்கே வந்தாலும் ஏழை எளிய மக்களின் தலையில் தான் கை வைக்கும் என்பது தான் உண்மை. இப்போதைக்கு அரசு சாக்கு போக்கு சொல்லிவிட்டாலும் இனிதான் ஆட்டமே ஆரம்பிக்கும். பாருங்கள்..’ இவ்வாறு மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுதொடர்பாக நெட்டிசன் கூறுகையில், ‘ அமைச்சர் புளுகிறார் . இழப்பை ஈடு கட்ட ஆதார் இணைப்பு என்றால்.. இருக்கும் ஏதோ ஒரு சலுகையை மறுக்கப் போகிறார்கள்.

அது இலவச நூறு அலகு மின்சாரமாக இருக்க வாய்ப்பு அதிகம். மின் வாரியத்துக்கு இழப்பு முந்தைய திமுக ஆட்சியில் தான் தொடக்கம். அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி அதை குறைந்த விலைக்கு தேர்தல் நேரத்தில் விற்று தான் மின் வாரியத்தை போண்டி ஆக்கினார்கள். மின்சாரம் வாங்கியதில் வாங்கியிருப்பார்கள் என்பது சொல்ல தேவையில்லை’ என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.