ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட உரத்தின் முதல் தொகுப்பு ஆப்பிரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாட்டு சபையின் ஒப்பந்தம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடங்கியதை அடுத்து உக்ரைனிய துறைமுகங்கள் சுற்றி வளைக்கப்பட்டு கடல் ஏற்றுமதி போக்குவரத்து முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால் ஏழை நாடுகளுக்கு உணவு தானியங்கள் மற்றும் விவசாய உரங்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டது.
ukraine grain- உக்ரைன் தானியம் (EPA)
இதையடுத்து உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இணைந்து தானியங்கள் மற்றும் உரங்களை கடல் துறைமுகங்கள் வழியாக எடுத்துச் செல்வதற்கான புதிய ஒப்பந்தத்தை ஜூலை மாதம் ஏற்படுத்தினர்.
ஆனால் கருங்கடலில் உள்ள உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து தானியங்கள் மற்றும் பிற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஐ.நா. தரகு ஒப்பந்தம், தற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பிறகு கடந்த மாதம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
ANI
ஆப்பிரிக்கா செல்லும் ரஷ்ய உரங்கள்
இந்நிலையில் பொருளாதார தடைகள் காரணமாக தேக்கி வைக்கப்பட்டு இருந்த ரஷ்ய உரங்கள் ஐநாவின் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் ஒற்றை பகுதியாக நெதர்லாந்தில் இருந்து மொசாம்பிக் வழியாக மலாவி-க்கு கொண்டு செல்லப்படுவதாக ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
சுமார் 20,000 மெட்ரிக் டன்கள் கொண்ட இந்த முதல் தொகுப்பு அடுத்த மாதங்களில் ஆப்பிரிக்காவை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐ நா குறிப்பிட்டுள்ளது.
fertilizers-உரங்கள் (gai-news.ru)
அத்துடன் ஐரோப்பா முழுவதும் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 260,000 மெட்ரிக் டன்கள் ரஷ்ய உரங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை மீண்டும் ஐ.நா வலியுறுத்துகிறது.