Monkeypox: குரங்கம்மை பெயர் மாற்றம் – புதிய பெயரை அறிவித்தது WHO

குரங்கம்மை நோய் பெயரை மாற்றி உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் அதிகளவில் பரவும். கை, கால்கள் உட்பட உடலில் கொப்புளங்கள் போல் இந்த நோய் பரவும். சமீபத்தில் இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. இதுவரை இல்லாத அளவில் உலக அளவில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டனர். இதன் பரவலைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் உலகளாவிய அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

பொதுவாக எந்த விலங்குகளிடம் இருந்த தொற்று பரவுகிறதோ அந்த நோய்க்கு சம்பந்தப்பட்ட விலங்கின் பெயர் சூட்டுவது வழக்கம். ஆனால், குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்து புதிய பெயரை சூட்ட முடிவு செய்தது.

அதெல்லாம் அந்த காலம்..! இனிமே தான் ஆட்டம்.. சீனாவை அலற விட்ட ரிஷி சுனக்

அதன்படி குரங்கம்மை நோய்க்கு எம்-பாக்ஸ் (mpox) என புதிய பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு வரை குரங்கம்மை என்ற பெயரும் பயன்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு எம்-பாக்ஸ் என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் உலக சுகாதார நிறுவன அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஒரு நோய்க்கு மறு பெயர் சூட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டுவது போல இருப்பதாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தததை அடுத்து புதிய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.