கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 219 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்தார்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஹாமில்டனில் நடந்த 2வது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ.,30) கிறைஸ்ட்சர்ச் நகரில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடக்கிறது. இதில் ‛டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்கள் தவான் (28), சுப்மன் கில் (13) விரைவாக வெளியேற, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஓரளவு நிலைத்து நின்று ஆடினார். ரிஷப் பன்ட் (10), சூர்யகுமார் (6) அடுத்தடுத்து அவுட்டாக இந்திய அணி சற்று தடுமாறியது. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் 49 ரன்னில் கேட்சானார். தீபக் ஹூடா (6), தீபக் சாகர் (12), சகால் (8), அர்ஷ்தீப் சிங் (9) என வரிசையாக விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி வரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 51 ரன்னில் அவுட்டாக இந்திய அணி 47.3 ஓவரில் 219 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் ஆடம் மில்னே, மிட்செல் தலா 3 விக்கெட், டிம் சவுத்தீ 2 விக்கெட் வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement