கடுமையான பனிப்பொழிவு… 30,000 பேர் இருளில் தவிக்கும் கனேடிய மாகாணம்


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

30,000 பேர் இருளில் தவிப்பு

பிரிட்டிஷ் கொலம்பியாவின் South Coast பகுதியில் பனிப்பொழிவு காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதால் 30,000க்கும் அதிகமான மக்கள் இருளில் தவித்துவருகிறார்கள்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதால், நேற்றிரவு மெட்ரோ வான்கூவரின் சில பகுதிகளை இணைக்கும் Alex Fraser பாலம் மூடப்பட்டது.

கடுமையான பனிப்பொழிவு... 30,000 பேர் இருளில் தவிக்கும் கனேடிய மாகாணம் | Where 30 000 People Live In The Dark


Shane MacKichan

வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரிக்கை

இன்றும் பனிப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ள வானிலை ஆராய்ச்சிமையம், அத்துடன், மணிக்கு 40 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசலாம் என்றும், ஆகவே, மக்கள் கூடுமானவரை பயணத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

கடுமையான பனிப்பொழிவு... 30,000 பேர் இருளில் தவிக்கும் கனேடிய மாகாணம் | Where 30 000 People Live In The Dark

image – Scott Blackley

விமானப் பயணிகளுக்கும் முக்கிய அறிவிப்பு

இந்நிலையில், வான்கூவர் மற்றும் Abbotsford விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணம் புறப்படுவோர் சரியாக விசாரித்து, தாமதத்தைத் தவிர்ப்பதற்காக சற்று முன்னதாகவே பயணிக்குமாறு வான்கூவர் விமான நிலையம் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று மாலை 7.00 மணியளவில், வான்கூவர் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று, வழுக்கிச் சென்று ஓடுபாதையை விட்டு விலகி புல்லில் சிக்கிக்கொண்டது.

என்றாலும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த விபத்துக்கு வானிலை காரணமா என்பது குறித்து விமான நிலையம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
 

கடுமையான பனிப்பொழிவு... 30,000 பேர் இருளில் தவிக்கும் கனேடிய மாகாணம் | Where 30 000 People Live In The Dark

Ben Nelms/CBC



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.