கத்தார் உலக கோப்பை! வேல்ஸ் அணியை கதறவிட்ட இங்கிலாந்து… விரக்தியடைந்த ரசிகர்கள்


கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டத்தில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.

முதல் கோல்

பி பிரிவு ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி ஆட்டத்தின் 50 வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு தமது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து 51வது நிமிடத்தில் மற்றொரு வீரர் பில் போடன் ஒரு கோல் அடித்து வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார். 68வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்டு மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல்கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

கத்தார் உலக கோப்பை! வேல்ஸ் அணியை கதறவிட்ட இங்கிலாந்து... விரக்தியடைந்த ரசிகர்கள் | Fifa Worldcup Qatar England Wales

Tom Jenkins/NMC Pool/The Guardian

விரக்தியடைந்த ரசிகர்கள்

இதன் மூலம் பி பிரிவில் 7 புள்ளிகளுடம் அந்த அணி முதலிடம் பிடித்தது.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

64 ஆண்டுகளுக்கு பின் வேல்ஸ் அணி உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், குரூப் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதனால் வேல்ஸ் அணியின் ரசிகர்கள் மைதானத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தினர்.

கத்தார் உலக கோப்பை! வேல்ஸ் அணியை கதறவிட்ட இங்கிலாந்து... விரக்தியடைந்த ரசிகர்கள் | Fifa Worldcup Qatar England Wales

PA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.