ட்விட்டரில் அடுத்த பெரிய வசதி… இனிமே 1,000மாம்… எலான் மஸ்க் மெகா பிளான்!

தொழில்நுட்பம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் பிரபலங்கள் பலரும் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை எலான் மஸ்க் வாங்குகிறார் என்பது தான் தலைப்பு செய்தியாக பல மாதங்கள் வலம் வந்து கொண்டிருந்தது.

ப்ளூ டிக் வசதி

அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி, அதன் தலைமை நிர்வாகிகள் பலரை வேலையை விட்டு தூக்கி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு குறிப்பிட்ட பணம் செலுத்தினால் ப்ளூ டிக் வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அதகளப்படுத்தினார். இதனால் லட்சக்கணக்கான மக்கள் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்கி வருகின்றனர். அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.

அமெரிக்காவ வெளிய துரத்துங்க… FIFA World Cup-ல் வெடித்த பூகம்பம்… செம கோபத்தில் ஈரான்!

அதிகரிக்கும் கேரக்டர்கள்

ஆனால் பிரபலங்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், பிராண்ட் நிறுவனங்களின் பெயர்களில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கி ப்ளூ டிக் வாங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இது எலான் மஸ்க்கிற்கு நெருக்கடியாக மாறியது. இந்த சூழலில் மூன்று நிறங்களை கொண்ட டிக் வசதியை அறிமுகம் செய்யவிருப்பதாக பேச்சு அடிபட்டது.

இதன்மூலம் உண்மையான பிரபலங்கள், தலைவர்கள், அதிகாரிகள், பிராண்ட் நிறுவனங்கள், சாதாரண மக்கள் யார்? என்பதை வேறுபடுத்தி பார்க்க முடியும். இதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக 280 கேரக்டர் என்ற வரம்பை 1,000ஆக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைக்ரோ ப்ளாக்கிங்

இதுதொடர்பாக பயனாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், ட்விட்டரில் ஆயிரம் கேரக்டர்கள் என்பது அடுத்தகட்ட பரிசோதனை முயற்சியில் இருப்பதாக தெரிவித்தார். முதன்முதலில் ட்விட்டர் என்பது மைக்ரோ ப்ளாக்கிங் தளமாக தான் அறியப்பட்டது. அதாவது 140 கேரக்டர்கள் மட்டுமே டைப் செய்ய முடியும். இதையடுத்து 2017ஆம் ஆண்டு 280 கேரக்டர்களாக அதிகரித்தனர்.

அதெல்லாம் அந்த காலம்..! இனிமே தான் ஆட்டம்.. சீனாவை அலற விட்ட ரிஷி சுனக்

அப்படி செய்ய வேண்டாமே

இது பின்னர் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த கேரக்டர் வித்தியாசம் தான் மற்ற சமூக வலைதளங்களை ட்விட்டர் உடன் வேறுபடுத்தி காட்டி வருகிறது. இந்நிலையில் ஒரே அடியாக ஆயிரம் கேரக்டர்களாக அதிகரித்து விட்டால், அது ட்விட்டரின் தரத்தை பாதிக்கும். மற்ற வலைதளங்கள் போல் ஆகிவிடும். யாருமே நறுக்கென்று விஷயத்தை பதிவிட மாட்டார்கள்.

வளவளவென இழுத்து விடுவர். அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்று சில பயனாளர்கள் கூறி வருகின்றனர். முதலில் 280ஐ 420 கேரக்டர்களாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று எலான் மஸ்க்கிற்கு ஆலோசனை அளித்துள்ளனர். இதுவொரு நல்ல திட்டம் என்று சமீபத்தில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். எனவே 280 கேரக்டர்களில் இருந்து கொஞ்சம் அதிகரிப்பதையே பயனாளர்கள் விரும்புவதை பார்க்க முடிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.