என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் நடிகை அனிகா. இதில் விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார் அனிகா. இதனால் இப்படத்திற்கு பின் இவரை சிலர் குட்டி நயன் என்றும் சிலர் பேபி அனிகா என்றும் பலர் அழைப்பார்கள்.
இதனிடையே இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு அஜித் – அனிகா இடையேயான தந்தை – மகள் கெமிஸ்ட்ரி அனைவரின் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. மேலும் ஜெயம் ரவியின் மிருதன், விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்த அனிகா, தொடர்ந்து பல பெரிய ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக அறிமுகாகி உள்ளார். அதன்படி இவர் புட்ட பொம்மா என்கிற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இது கப்பேலா என்கிற மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.
இந்த நிலையில் தற்போது நேற்று முன்தினம் 18 வயதை எட்டியுள்ள அனிகா, தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளார். இந்த விழாவில் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துகொண்டனர். அப்போது அவர் கருப்பு நிற உடை அணிந்து கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அனிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களுக்கு சோசியல் மீடியவில் லைக்குகள் குவிந்து வருகின்றன. அத்துடன் பலர் அவர் நயன்தாராவைப் போல் அச்சு அசலாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.