புதுச்சேரி: புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று (நவ.,30) அதிகாலை உயிரிழந்தது. நடைபயிற்சிக்காக ஈஸ்வரன் கோவில் அருகே சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக யானை பாகன் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானை லட்சுமியின் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருந்திருக்கலாம் என உடலை ஆய்வுக்காக அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. தற்போது லட்சுமிக்கு 32 வயது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement