போதை மருந்து சோதனையில் துறவிகள் தோல்வி! முழுவதும் காலியான புத்த கோவில்


தாய்லாந்தில் உள்ள ஒரு புத்த கோவிலில் இருந்த அனைத்து துறவிகளும் போதைமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்த நிலையில் துறவிகள் இன்றி மொத்த கோவிலும் காலியானது.

புத்த கோவில்

Phetchabunன் வடக்கு பகுதியில் உள்ள புத்த கோவிலில் மடாதிபதி உட்பட நான்கு துறவிகளுக்கு மெத்தம்பேட்டமைன் பரிசோதனைக் திங்கட்கிழமை அன்று செய்யப்பட்டது. அப்போது அவர்கள் போதை பொருளான methamphetamine பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை மாவட்ட அதிகாரி Boonlert Thintapthai வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த துறவிகள் அங்குள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

போதை மருந்து சோதனையில் துறவிகள் தோல்வி! முழுவதும் காலியான புத்த கோவில் | Thailand Buddhist Temple Left Empty Drugs

Pongmanat Tasiri/SOPA Images/LightRocket via Getty Images

தெருக்களில் போதை மாத்திரை விற்பனை

இதன் காரணமாக அந்த கோவில் புத்த துறவிகள் இன்றி காலியானது.
இதனால் பொதுமக்கள் தவித்த நிலையில் அவர்களின் மதநம்பிக்கை மற்றும் வழிபாடுகளைக் கருதி வேறு புத்த துறவிகள் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய அளவில் methamphetamine-ஐ உற்பத்தி செய்யும் மியான்மர், அதை தாய்லாந்து நாட்டிற்கு அனுப்புகிறது.

இந்த மாத்திரைகள் தெருக்களில் சுமார் $1.41-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

போதை மருந்து சோதனையில் துறவிகள் தோல்வி! முழுவதும் காலியான புத்த கோவில் | Thailand Buddhist Temple Left Empty Drugs

sg.news.yahoo



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.