'மக்கள் வயிறு தான் எரியுது..!' – மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

“எதற்கும் உதவாத பொம்மை முதல்வராக செயலற்ற முதல்வராக ஸ்டாலின் விளங்குகிறார்,” என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான

செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அதள பாதாளத்தில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை மீட்டெடுத்து தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற பாதைக்கு அதிமுக ஆட்சியில் கொண்டு சென்றோம். சட்டம் – ஒழுங்கு முறையாக செயல்படுத்தப்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. ஆனால் தற்போது தமிழகம் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 36 மணி நேரத்தில் 12 கொலைகள் நடக்கிறது. சட்டம் – ஒழுங்கு முற்றிலும் இல்லாத தமிழகமாக மாறி விட்டது.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 2,138 பேர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள் விற்பதாக கண்டறிக்கப்பட்ட நிலையில் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பது ஏன்? மற்றவர்கள் கைது செய்யப்படாததற்கு ஆளுங்கட்சியின் பின்னணி உள்ளவர்கள். அவர்களின் அழுத்தம் காரணமாக காவல் துறை நடவடிக்கை எடுக்க தயங்கின்றனர்.

சமீபத்தில் ராமநாதபுரத்தில் 360 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதைப் பொருள் கடத்தப்பட்டது கண்டறிக்கப்பட்டது. இந்த விஷயத்தில்

நிர்வாகி பின்னணியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து மற்றவர்கள் வயிறு எரிவதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், மற்றவர்கள் வயிறு எரியவில்லை; மக்கள் வயிறுதான் தான் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த அளவில் தமிழகம் மோசமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

எதற்கும் உதவாத பொம்மை முதல்வராக செயலற்ற முதல்வராக ஸ்டாலின் விளங்குகிறார். எதிர்க்கட்சியை பழிவாங்குவதை கைவிட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கும் கருத்துக்களை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் வந்த செய்திகளின் அடிப்படையில் அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுபற்றி யோசிக்காமல் தனது குடும்ப நினைவுகளை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் முதலமைச்சர், நாட்டு மக்களின் நிலைமையை பற்றி பேச நினைக்கவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மிக நல்ல திட்டங்களான, மடிக்கணினி வழங்கும் திட்டம், தாலிக்கு வழங்கும் திட்டத்தை திமுக அரசு முடக்கியது. மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை முடக்கியது தான் திமுக அரசின் சாதனையா..? கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் மக்களுக்காக செய்து கொடுத்திருப்பதாகவும் அதை தான் பட்டியலிட்டு பொது மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயார். அதேசமயம் கடந்த 19 மாத கால ஆட்சியில் நீங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் என்ன? அதனால் மக்கள் அடைத்த பயன் என்ன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..?

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.