மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பான விழிப்புணர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புனர்வு பயிற்சி கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (30) நடைபெற்றது.

காணி தொடர்பான புதிய நடைமுறைகள் மற்றும் அரச காணி தொடர்பான சட்டங்கள் மற்றும் சுற்று நிருபங்களின் அடிப்படையில் எவ்வாறு மக்களுக்கு வழிகாட்டல்களை தெளிவுபடும்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்படுகின்ற சட்டங்களையும் சுற்றுநிருபங்களையும் பின்பற்றி பணியினை ஆற்றுவது தொடர்பான கருத்துக்களுக்கு வளவாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

அரச காணி குத்தகை நடைமுறைகள் மற்றும் காணியற்றவர்களுக்கான காணி வழங்கல் நடைமுறைகள் பற்றிய விளக்கங்களும் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான விவசாய மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்கான காணி வழங்களில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அப்பால் புதியநடைமுறைகளும் பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விடையங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இன் நிகழ்வில் திருமதி கே.பி.ரி.பிறேமதாச, காணி ஆணையாளர் மற்றும் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கிழக்கு மாகாண காணி திணைக்களத்தின் உதவி காணி ஆணையாளர் G.ரவிராஜன் மட்டக்களப்பு காணி பிரிவின் காணி தலைமை உத்தியோகத்தர் திருமதி குகதா ஈஸ்வரன் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Logini Sakayaraja

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.