மத்திய பிரதேச வனப்பகுதிக்குள் இருந்த புலி வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை: வன அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

நத்மதாபுரம்: பாலிவுட் நடிகை ரவீன் டாண்டன் கடந்த சில தினங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில், மத்திய பிரதேச மாநிலம் சத்புரா புலிகள் காப்பகத்தின் உள்ள பசுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ரவீனா ரசித்துக்கொண்டிருந்தார். சஃபாரி வாகனத்தில் சென்ற போது, புலி ஒன்று அவருக்கு அருகே வருவது போன்றும், அந்தப் புலி அவரை நோக்கி உறுமுவது போன்றும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகத்திற்குள் ரவீன் மற்றும் அவரது குழுவினர் எப்படி சென்றனர்? இதுபோன்ற நபர்களால் வன உயிரனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்ககைள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து சத்புரா புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர்  சந்தீப் பெலோஜ் கூறுகையில், ‘நடிகை ரவீனா வனப்பகுதிக்கு சென்று வந்தது குறித்தும், அவருடன் சென்ற ஓட்டுநர் மற்றும்  வழிகாட்டியிடமும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் பணியில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார். இவ்விவகாரத்தின் முக்கிய திருப்பமாக, சமூக ஊடகங்களில் வெளியிட்ட புலி வீடியோவை நடிகை ரவீன் தற்போது நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.