லண்டனில் இலங்கை பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொன்ற இந்தியர்! அவரின் கொடிய முகம்… முழு தகவல்


லண்டனில் இலங்கை பெண்ணை சீரழித்து கொன்றதோடு மேலும் 3 பெண்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இந்தியர் தொடர்பில் மூத்த அதிகாரி சில விடயங்களை தற்போது பேசியுள்ளார்.

லண்டனில் 2009ல் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள்

Aman Vyas (38) என்ற இந்தியர் கடந்த 2009ல் லண்டனையே அதிரவைத்திருந்தார்.
ஏனெனில் அந்த ஆண்டில் மூன்று பெண்களை துஷ்பிரயோகம் செய்ததோடு மற்றொரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்திருந்தார்.

அதிகாலை அல்லது நள்ளிரவில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்தே இந்த கொடூர செயல்களில் Aman ஈடுபட்டு வந்திருக்கிறார்.
முதலில் மார்ச் மாதம் 2009ல் அடுக்குமாடி வீட்டில் தனியாக இருந்த 59 வயதான பெண்ணை தாக்கி துஷ்பிரயோகம் செய்துவிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு தப்பியோடினார்.

அடுத்து 46 வயதான பெண்ணிடம் போதை மருந்துகள் வாங்கி கொள்ளும்படி கூறி அவரை சீரழித்திருக்கிறார்.
இதற்குபின் ஏப்ரல் 2009ல் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து சென்று கொண்டிருந்த பெண்ணை கொடூரமாக தாக்கி சீரழித்துள்ளார்.

லண்டனில் இலங்கை பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொன்ற இந்தியர்! அவரின் கொடிய முகம்... முழு தகவல் | London Srilankan Women Killed Night Stalker

 PA Wire/PA Images/Metropolitan Police/PA Wire/Steve Bainbridge

உயிரிழந்த இலங்கை பெண்

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் இருந்து கண்விழிக்கும் வரை அப்பெண்ணுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. முனகல் சத்தம் மற்றும் அலறல் சத்தம் கேட்டு பொலிசாருக்கு போன் செய்த பொது மக்கள் ஒரு கல்லறை அருகே கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தலையில் ஆழமான வெட்டு, மூக்கு மற்றும் தாடை உடைந்து ஒரு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இதற்கு பின்னர் Aman மே மாதம் 2009ல் நள்ளிரவு 1 மணிக்கு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வெளியே வந்த இலங்கை பெண்ணான Michelle Samaraweera (அப்போது வயது 35) என்பவரை பின் தொடர்ந்து சென்றார்.

பிறகு அவரை துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் Aman.
Michelle உடல் அரை நிர்வாண நிலையில் கிடந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடந்த நிலையில் Aman இந்தியாவுக்கு தப்பியுள்ளார்.
இது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குப்பின் May 5, 2011ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி Aman Vyas கைது செய்யப்பட்டார்.

லண்டனில் இலங்கை பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொன்ற இந்தியர்! அவரின் கொடிய முகம்... முழு தகவல் | London Srilankan Women Killed Night Stalker

dailymail

உயர் அதிகாரி

ஆனால் அவரை பிரித்தானியாவுக்கு கொண்டு வர முடியாத சூழல் நிலவிய நிலையில் ஒருவழியாக 2019ல் லண்டனுக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்குள்ள Croydon Crown நீதிமன்றத்தில் கொலை, பலாத்காரம், மற்றும் கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
பின்னர் 2020ல் Amanக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, அதன்படி அவர் குறைந்தபட்சம் 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தது, இருப்பினும் அவரது குற்றங்களுக்காக அவர் ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டார் என்று நீதிபதி கூறினார்.

இது தொடர்பில் டிடெக்டிவ் சர்ஜெண்ட் ஷலீனா ஷேக் கூறுகையில், Aman நான்கு பெண்கள் மீது கொடூரமான மற்றும் வன்முறைத் தாக்குதல்களை நடத்தினார், அது துரதிர்ஷ்டவசமாக, Michelle கொலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

அவர் தனது குற்றங்களுக்கான பொறுப்பைத் தவிர்க்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார், மேலும் இந்தியாவுக்கு தப்பி ஓடினார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த செயல்முறை முழுவதும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காட்டிய கண்ணியத்தையும் துணிச்சலையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.

தற்போது அவர் தண்டனை அனுபவித்து வருகிறார், இந்த வழக்கின் விசாரணைகள் பல்வேறு நாடுகளுக்கு எங்களை எடுத்து சென்றது என கூறியுள்ளார். 

லண்டனில் இலங்கை பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொன்ற இந்தியர்! அவரின் கொடிய முகம்... முழு தகவல் | London Srilankan Women Killed Night Stalker



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.