விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ‘வாரிசு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. வம்சி பைடிபல்லி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தானா ஹீரோயினாக நடிக்க பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் முக்கியமான ரோல்களில் நடித்திருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம், அஜித்தின் துணிவு படத்துடன் மோத இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் நேருக்கு நேர் இந்த பொங்கலுக்கு மோத இருக்கின்றன. இதனால், வரும் தைப்பொங்கல் துணிவு பொங்கலா கொண்டாடப்படுமா? அல்லது வாரிசு பொங்கலாக கொண்டாடப்படுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருகிகன்றனர். அதற்கேற்ப வாரிசு மற்றும் துணிவு படக்குழுவினர் புரோமோஷன் பணிகளை தொடங்கிவிட்டனர்.
வாரிசு படத்தின் முதல் சிங்கிள் அண்மையில் வெளியானது. விஜய்யின் குரலில் வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் இணையத்தில் செம ஹிட் அடித்துள்ளது. அடுத்த சிங்கிள் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜய்க்கே தெரியாமல் வாரிசு புரோமோஷன் நியூசிலாந்தில் நடைபெற்றது.
நியூசிலாந்தில், இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பார்க்க சென்ற விஜய் ரிசகர்கள் ஒருவர், வாரிசு படத்துக்காக ஸ்பெஷல் புரோமோஷனை செய்தார். அதாவது, வாரிசு படம் வெற்றி வாழ்த்துகள் என பதாகை ஒன்றில் எழுதி மைதானத்தில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இப்போது இணையத்தில் வாரிசு படத்துக்கு ஸ்பெஷல் புரோமோஷனாக மாறி ஹிட் அடித்துள்ளது.