அசாம்: அசாம் மாநிலம் கோல்பரா மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி விட்டு, மக்கள் வசிக்கும் பகுதிக்குள் காட்டு யானகைள் கூட்டம் புகுந்துள்ளது.
இதனால் மக்கள் கூட்டமாக சென்று, விரட்ட முயன்றபோது, யானைகள் துரத்தியது. குறிப்பாக ஒரு யானை, மக்கள் கூட்டத்தில் ஒருவரை விரட்டி, அலற செய்யும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், காட்டில் இருந்து சுமார் 40 காட்டு யானைகள் உணவு தேடி இங்கு தஞ்சம் அடைந்து நெல் பயிர்களை சேதப்படுத்தியது.
இதனைப்பார்த்த, நாங்கள் கூட்டமாக சென்று, யானையை துரத்த முயன்றோம் என்றார். வீடியோவில், மக்கள் கூட்டம் யானை கூட்டத்தை விரட்ட முயன்ற போது, யானை கூட்டங்கள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது. ஒரு யானை, மக்கள் கூட்டத்தில் ஒருவரை விரட்டி, அலற செய்தது.

இதையடுத்து, மக்கள் கூட்டம் தைரியமாக முன்னேறி செல்ல, அந்த யானை காட்டுக்குள் திரும்பி போய்விட்டது. எனினும், சிறிது நேரத்தில் மரங்களின் உள்ளே இருந்து, காட்டு யானை ஒன்று கும்பலை நோக்கி விரைவாக முன்னேறியது. இதனால், யானையை விரட்ட சென்ற கும்பல் அலறியடித்து திரும்பி ஓடி வந்தது.
யானைகள் காட்டை விட்டு ஊருக்குள் வரும் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், உணவு தேடி ஊருக்குள் வந்த யானைகளை விரட்ட சென்ற கும்பலை, காட்டு யானை ஒன்று துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement