#சென்னை வாகன ஓட்டிகளே உஷார் – வேற வழியே இல்லை உங்களுக்கு! கோடி கணக்கில் அபராதம், அதிர்ச்சி ரிப்போர்ட்!

மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. அதன்படி, போக்குவரத்து போலீசார் புதிய அபராதம் விதித்து வருகின்றனர்.  குறிப்பாக மது போதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் 10,000 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராத தொகையை செலுத்தாமல் பல வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதை தடுக்கவும், மது போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை … Read more

ரசிகர்கள் அதிர்ச்சி..!! ப்ரோ கபடி லீக்கில் இருந்து விலகினார் பவன் ஷெராவத்!!

ப்ரோ கபடி லீக்கின் 9வது சீசன் கடந்த அக்டோபர்ம் 7-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தமிழக ரசிகர்களுக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் முதல் போட்டியில் குஜராத் அணியுடன் மோதி 31 – 31 என்ற புள்ளிகளில் டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் போது … Read more

சிதம்பரம் மாணவிக்கு சக மாணவர் தாலி கட்டிய விவகாரம் – அதிகாரிகள் அவசரகதியில் செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் கடும் கண்டனம்

சென்னை: சிதம்பரத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு சக மாணவர் தாலிகட்டிய விவகாரத்தில், குழந்தைகள் நலக் குழுமம் அந்த மாணவியை அவசரகதியில் பெற்றோரிடம் இருந்து பிரித்து, அரசு விடுதியில் அடைத்தது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிதம்பரத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு, அவருடன் படிக்கும் சக மாணவர் கடந்த செப். 2 அன்று சிதம்பரம் காந்தி சிலை பேருந்து நிலையத்தில் தாலி கட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. … Read more

ஹைதராபாத், டெல்லி, பெங்களூருவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வீடு வாங்க முன்னுரிமை

புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே (என்ஆர்ஐ) இந்தியாவில் வீடு வாங்குவது குறித்து சிஐஐ-அனாராக் கருத்துக்கேட்பு நடத்தியது. மொத்தம் 5,500 வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், அவர்களில் 60 சதவீதம் பேர் ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் வீடு வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 22 சதவீதத்தினர் ஹைதராபாத்தை தங்கள் முதன்மைத் தேர்வாக குறிப்பிட்டுள்ளனர். 20 சதவீதத்தினர் டெல்லியையும், 18 சதவீதத்தினர் பெங்களூருவையும் தங்கள் தேர்வாக குறிப்பிட்டுள்ளனர். இது 2022-ம் ஆண்டு முதல் 6 … Read more

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று (5) அவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்படடுள்ளார். பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பும் அணி இந்த நிலையில் தனுஷ்க குணதிலக்க இல்லாமல் இலங்கை கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவிருந்து கொழும்புக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டில் முறைகேடு செய்ததற்காக குணதிலகவை இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் … Read more

நவம்பர் 6: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 169-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 169-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பேரிடரை எதிர்கொள்ள 65,000 களப்பணியாளர் தயார்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் பெரியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இந்த 2 மாதங்களில் புயல் வந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும். புயல் வந்தாலும் அதனை சந்திக்க அனைத்து மாவட்ட நிர்வாகமும்  விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடற்கரையோர மாவட்ட கலெக்டர்கள் விழிப்புடன் இருப்பதுடன், அவசர … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,605,004 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,605,004 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 637,508,716 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 617,053,698 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,026 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகா நடைபயணத்தில் சினிமா பாடல் ராகுல் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: காங்கிரசின் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது, கன்னட திரைப்படமான கேஜிஎப் இசையை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி உட்பட மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்ட போது, அனுமதியின்றி கேஜிஎப்-2 இந்தி   திரைப்படத்தின் இரண்டு பாடல்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த பாடல்களை ஜெய்ராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் … Read more