பண மோசடி வழக்கில் எம்.எல்.ஏ., கைது| Dinamalar

புதுடில்லி, பண மோசடி தொடர்பான வழக்கில், உத்தர பிரதேசத்தின் பிரபல தாதா முக்தார் அன்சாரியின் மகனும், எம்.எல்.ஏ.,வுமான அப்பாஸ் அன்சாரி, 30, கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தாதா, முக்தார் அன்சாரி, ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உட்பட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவர் மற்றும் அவருடைய குடும்பத்தார் செய்துள்ள பண மோசடி … Read more

த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு? – ஏக்கத்தில் குமுறும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா வரலாற்றில் கடந்த 20 ஆண்டுகளாக ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. சமீபகாலங்களில் இவர் நடிக்கும் படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் அவருக்கான மார்க்கெட் இன்னும் குறையவேவில்லை. மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக ரீ என்ட்ரி கொடுத்த த்ரிஷா, படத்தில் நடித்த மற்ற அழகிகளை விடவும் ரசிகர்கள் மனதை மிகவும் கவர்ந்தார். அந்த அளவுக்கு தென்னிந்திய திரையுலகில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகை என்றால் த்ரிஷா மட்டும் தான். … Read more

பாகிஸ்தானில் அவசர நிலையா…? இம்ரான் கான் பேச்சை ஒளிபரப்ப தடை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானின் பேச்சுகள், செய்தியாளர் சந்திப்புகளை ஆகியவற்றை ஒளிபரப்பவும், மறு ஒளிப்பரப்பவும் அரசு நேற்று (நவ. 5) தடை விதித்தது. இதுகுறித்து, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் (PEMRA) வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நாட்டின் தலைமைக்கும், அரசு நிறுவனங்களுக்கும் எதிராக வெறுக்கத்தக்க வகையிலும், அவதூறான வகையிலும் பேசும் அவசியமற்ற பேச்சுகளை ஒளிபரப்புவது அரசியலமைப்பின் முற்றிலும் மீறவதாக அமையும்” என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், “எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில், … Read more

முதல்வர் ஸ்டாலினுக்கே விபூதி அடிக்க பார்த்த அமைச்சர் சக்கரபாணி?! முக்கிய பதவி பறிப்பு!!

தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்கிறது. இந்த கழகத்தின் மூலம் அரிசி கோதுமை பருப்பு வகைகள் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்படும். அவ்வாறு சேமிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக உருகி வழிந்த வெள்ளம் … Read more

மாணவர் மார்பில் அயர்ன் பாக்ஸ் சூடு…தொடரும் ராகிங் கொடுமை..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி விடுதியில் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர், விடுதி அறைக்குள் மற்றொரு மாணவனை இரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீடியோவில், பாதிக்கப்பட்டவர் தன்னை அடிக்க வேண்டாம் என்று அவர்களிடம் கெஞ்சுவதும், சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதும் உள்ளது. தொடர்ந்து அவரைத் தாக்குவதைக் காட்டுகிறது. அவரது … Read more

மக்களே..!! தமிழ்நாட்டில் நவம்பர் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் நவம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது 10, 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு | 2 ஆயிரம் பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் – பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2,048 வீரர்கள், 5,093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிவாரணம் வழங்க நடவடிக்கை நவ.5-ம் தேதி (நேற்று) காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் … Read more

குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும்: கருத்துக் கணிப்புகளில் தகவல்

புதுடெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. கடந்த 1995-ம் ஆண்டு முதல் அங்கு பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தற்போது 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த … Read more

சென்னையில் போக்குவரத்து விதி மீறல்: ரூ.1.41 கோடி அபராதம் விதிப்பு

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி கடந்த 10 நாட்களில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை ரூ.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாத 5,096 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.