முக்கிய ரயில் நிலையங்களில் மருந்து கடைகள்: பயணிகள் கோரிக்கை

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் மருந்துக் கடைகள் இல்லாததால், அவசரத்துக்கு மருந்து கிடைக்காமல் பயணிகள் தவிக்கின்றனர். எனவே, முக்கிய ரயில் நிலையங்களில் மருந்துக் கடைகள் அமைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில் பயணிகளின் வசதிக்காக, தனியார் பங்களிப்போடு பல்வேறு வசதிகளை இந்திய ரயில்வே மேம்படுத்தி வருகிறது. இருப்பினும், முக்கியமான ரயில் நிலையங்களில் மருந்துக்கடை இல்லாததால், அவசரத் தேவைக்கு மருந்து, மாத்திரை பெற முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, … Read more

ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுப்பு: இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுக்க‌ப்பட்டது. இதனால் தாயும் இரட்டை குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி க‌ஸ்தூரி (30), கர்நாடகாவின் துமகூருவில் உள்ள பாரதி நகரில் வ‌சித்து வந்தார். கர்ப்பிணியான இவருக்கு கடந்த 2-ம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டதால் துமகூரு அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஆதார் அட்டை, கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் தாய் அட்டை, குடும்ப‌ அட்டை ஆகியவை கேட்கப்பட்டது. அந்த … Read more

தொழிலதிபரை பெண்ணுடன் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்… சினிமாவை மிஞ்சும் சம்பவம்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரை கட்டாயப்படுத்தி, ஒரு பெண்ணுடன் அவரை நிர்வாணமாக இருக்கும் வகையில் சித்தரித்து வீடியோ எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டதாக மூன்று பேரை டெல்லி போலீசார் நேற்று (நவ. 5) கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அமிர் இக்பால் (52),  முகமது அஸ்ரஃப் (50), ஃபிரோஜ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில்,”உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் மர வியாபாரம் செய்துவரும் 45 வயதான சந்தீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), … Read more

இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குருகிராமில் 50 பிளாட்கள் கொண்ட குடியிருப்பு வளாகத்தை இடிக்க உத்தரவு..!

டெல்லியை அடுத்த நொய்டாவில் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குருகிராமில் குடியிருப்பு வளாக கட்டடம் இடிக்கப்பட உள்ளது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு இக்குடியிருப்பில் ஒரு வீட்டில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.இதில் 2 பேர் உயிரிழந்தனர். பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து கட்டடத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அந்த ஆய்வின் படி கட்டடம் குடியிருப்பதற்கான தகுதி இல்லாதது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 பிளாட்டுகள் கொண்ட இந்தக் கட்டடத்தை இடிக்க உத்தரவு … Read more

உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.05 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 61.70 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தம்பதி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தம்பதி மூர்த்தி (78), பானுமதி (76), மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். வாசல் இரும்பு கேட் அருகே உள்ள மின் விளக்கில் இருந்து, மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உபி.யில் எம்எல்ஏ மகன் திடீர் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பணமோசடி வழக்கில் எம்எல்ஏ முக்தர் அன்சாரியின் மகன் அப்பாசை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவ் சட்டமன்ற தொகுதியின் சுகுல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் எம்எல்ஏ முக்தர் அன்சாரி. இவர் பெரிய  தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். 5 முறை எம்எல்ஏவான இவர்  தற்போது பாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 49 கிரிமினல் வழக்குகளில் முக்தர் அன்சாரிக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து இவரை கண்காணித்து வருகிறது. இவருக்கு … Read more

ஆர்.டி.ஐ., தகவல்களை பெற மேளதாளத்துடன் வந்த ஆர்வலர்| Dinamalar

ஷிவ்புரி, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தான் கேட்ட தகவல்களைப் பெறுவதற்காக, அரசு அலுவலகத்துக்கு மாட்டு வண்டியில், மேளதாளத்துடன் சமூக ஆர்வலர் சென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஷிவ்புரி மாவட்டம் பைராட் நகரைச் சேர்ந்தவர் மக்கன் தக்கட். சமூக ஆர்வலரான இவர், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்த சில தகவல்களை கேட்டிருந்தார். ஆனால், அந்த தகவல்களை தருவதற்கு … Read more

கல்கி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வழங்கிய பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள்

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தயாரித்த லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது. இன்று மாலை இயக்குனர் மணிரத்னமும் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரனும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அலுவலகத்துக்கு நேரில் சென்று அமரர் கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரனைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது கல்கி ராஜேந்திரன் தன் தந்தையின் பெயரில் நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி … Read more