டுவிட்டர் இந்தியாவில் 200 பேர் நீக்கம்| Dinamalar

புதுடில்லி, ‘டுவிட்டர்’ இந்தியாவில் பணியாற்றி வந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ‘டுவிட்டர்’ சமூகவலைதள நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கிய பின், நிறுவனத்தின் செலவுகளை குறைத்து மறுசீரமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார். முதல்கட்டமாக தலைமை பொறுப்பு வகித்து வந்த அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றினார். தற்போது உலகம் முழுதும் உள்ள டுவிட்டர் அலுவலகங்களில் பொறியியல், விற்பனை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் ஆட்குறைப்பு நேற்று நடந்தது. மொத்தமுள்ள 7,500 … Read more

ஆறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தடை! அசம்பாவிதம் நடைபெற்றால் ஆர்எஸ்எஸ் தான் பொறுப்பு!

கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நவம்பர் 6ஆம் தேதி அன்று ஊர்வலத்தை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் காவல்துறையினர் அதற்கான நிபந்தனைகளையும் வரையறைகளையும் வகுத்து அனுமதி அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.  இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் காவல் துறைக்கு … Read more

‘பெகட்ரான்’ தொழிற்சாலையில் ஐபோன்-14 உற்பத்தி தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் Mahindra World City-ல் உள்ள பெகட்ரான் தொழிற்சாலையில் ஐ-போன் 14 உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜெங்ஜோ நகரில் ஐபோன் 14 தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பாக்ஸ்கான் தொழிற்சாலை கொரோனா கட்டுப்பாடுகளால் திடீரென மூடப்பட்டது. இதையடுத்து மற்றொரு தைவான் நாட்டு மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான பெகட்ரான், 7,000 பணியாளர்களை கொண்ட தங்கள் செங்கல்பட்டு தொழிற்சாலையில் ஐபோன் 14-ஐ அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் Foxconn, Pegatron, Wistron என அனைத்து முன்னனி தைவான் நிறுவனங்களும் இந்தியாவில் … Read more

கர்நாடகாவில் இரட்டைக் குழந்தைகளுடன் தமிழ்ப் பெண் உயிரிழப்பு: அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது அண்ணாமலை காட்டம்

சென்னை: “ஆதார் இல்லாதாதல் பிரசவம் பார்க்க மறுப்பு தெரிவித்த காரணத்தால், தமிழகத்தைச் சேர்ந்த பெண், இரட்டை குழந்தைகளுடன் மரணம் அடைந்த சம்பவத்தில் அனைத்து ஊழியர்களையும் கைது செய்ய வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த … Read more

Whatsappல் தெரியாமல் கூட இந்த வேலையை செய்து விடாதீர்கள்! மீறினால் தலைவலி தான்

வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எச்சரிக்கை. முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்க்குகளை க்ளிக் செய்ய வேண்டாம். உலகம் முழுவதும் பல கோடி மக்களால் வாட்ஸ் அப் செயலி உபயோகப்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக வாட்ஸ் அப் மூலம் ஒரு மோசடி உலகளவில் அதிகம் நடக்கிறது. அதன்படி, ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் இணைப்புகள் மூலம் வாட்ஸ்அப்பில் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பல ஹேக்கர்கள் விழா காலங்களில் சலுகைகள் தொடர்பாக லிங்குகளை வாட்ஸ்அப் மூலம் நண்பர்கள், தொடர்பில் இருக்கும் … Read more

மூணையும் எங்களால் வளர்க்க முடியாது… நீங்களே பார்த்துக்குங்க… ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளை ஜி.ஹெ.,ச்சில் விட்டுச்சென்ற பெற்றோர்: 60 நாளில் மனம் மாறி வராவிட்டால் தத்து கொடுக்க திட்டம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழ்நிலையால் மருத்துவமனையில் பெற்றோர் விட்டுச் சென்றனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவர், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு கடந்த மாதம் 20ம் தேதி நடந்த பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது. அப்போது, குழந்தைகளுக்கு எடை குறைவாக இருப்பதால், குழந்தைகள் நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழ்நிலை உள்ளதால், … Read more

ஒடிசாவில் விரைவில் சோதனை நடத்தும் இந்திய ஏவுகணையை கண்காணிக்க உளவுக் கப்பலை அனுப்பியது சீனா: இந்திய பெருங்கடலில் நிலைநிறுத்தியதால் பரபரப்பு

புதுடெல்லி: அடுத்த சில நாட்களில் இந்தியா அதிநவீன ஏவுகணையை சோதனை செய்ய உள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் சீனா தனது உளவுக்கப்பலை நிறுத்தியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னை கடந்த 2020ம் ஆண்டிலிருந்து தீவிரமான நிலையில் உள்ளது. இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம், சீனாவின் அதிநவீன உளவு கப்பலான யுவாங் வாங்-5, இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. தென் சீன கடலுக்கு திரும்பும் முன்பாக எரிபொருள் நிரப்ப இக்கப்பல் ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு வருவதாக … Read more

மாணவிக்கு காதல் டார்ச்சர்; மாணவர் சிறையிலடைப்பு: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

கோவை : கோவை, ஆர்.எஸ்.புரம் குமாரசாமி காலனி சுண்டப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சூர்ய பிரகாஷ், 21. இவர், தனியார் கல்லுாரியில் பி.காம்., படிக்கிறார். அதே கல்லுாரியில் பி.காம்., படிக்கும் மாணவி ஒருவரை, ஒரு தலையாக காதலித்தார். 6 மாதங்களுக்கு முன் மாணவியிடம் காதலை தெரிவித்தார்; அவர், ஏற்க மறுத்து விட்டார். விடாப்படியாக அவரை பின் தொடர்வதை மாணவர் வழக்கமாக கொண்டிருந்தார். மாணவி, தன் குடும்பத்தினரிடம் இதுபற்றி தெரிவித்தார். மாணவியின் சகோதரர், குறிப்பிட்ட அந்த மாணவரை அழைத்து கண்டித்தார். … Read more