இளவரசர் ஹரியின் மகன் ஆர்ச்சி ஹாரிசன் தனது அம்மா மேகன் மார்க்கல் மற்றும் பாட்டியுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் அரிதாக வெளியாகியுள்ளது.
மே 2019-ல் பிறந்ததிலிருந்து இளவரசர் ஹரி மற்றும் மேகனுடன் மிகவும் அரிதாகவே பொதுவெளியில் காணப்பட்ட ஆர்ச்சி, சமீபத்தில் ஒரு வீடியோ காலில் மேகனின் மடியில் அமர்ந்திருக்கும்போது காணப்பட்டார்.
அமெரிக்க அரசியல் நிபுணர் டோனா பிரேசில் மற்றும் சமூக தாக்க ஆலோசனை நிறுவனமான ஃபுல் சர்க்கிள் ஸ்ட்ராடஜீஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோடகா எடி ஆகியோருடன் மேகன் மார்க்கல் உரையாடிய அந்த வீடியோ அழைப்பில், ஆர்ச்சி காணப்பட்டுள்ளார்.
GettyImages
மகன் ஆர்ச்சி மட்டுமின்றி, மேகனுக்கு பின்னால் அவரது தாய் டோரியா ராக்லாண்டு காணப்பட்டார். இந்த புகைப்படம் பேராசிரியர் டச்சஸ் ஹாரிஸால் பகிரப்பட்டது.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் தங்கள் குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர். எனவே, ஆர்ச்சியின் சில அரிய புகைப்படங்களில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது.