திருவள்ளூர்: பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் மீனவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பழவேற்காடு அருகே கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறும் போராட்டத்தை நடத்தினர். கூனங்குப்பம் மீனவ பிரதிநிதிகள் மற்றும் 12 கிராம மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். நேற்று மீன் பிடி பிரச்சனையால் கூனங்குப்பம் மீனவர்கள் ஊரைவிட்டு வெளியேறும் போராட்டம் நடத்தினர்.
