கண்ணீர் விட்டு கதறிய மேகன் மார்க்கல்: வெளியானது நெட்பிக்ஸ் ஆவணப்படத்தின் டீசர்!


பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பாக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் புதிய ஆவணப்படத்தின் டீசரை நெட்பிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

நெட்பிக்ஸ் ஆவணப்படம்

பிரித்தானிய அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் தம்பதியினரின் புதிய ஆவணப் படத்தின் டீசரை நெட்பிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

சுமார் 1 நிமிடம் 12 வினாடிகள் கொண்ட டீசரில் இளவரசர் ஹரி “மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யாரும் பார்க்கவில்லை” என்று பேசும் வார்த்தைகள் கேட்கிறது.

ஹரி மற்றும் மேகனின் இந்த புதிய ஆவணப் படத்தின் டிரெய்லர் நெட்ஃப்ளிக்ஸின் ட்விட்டர் கணக்கில், “ஹாரி & மேகன். ஒரு நெட்ஃபிக்ஸ் குளோபல் நிகழ்வு. விரைவில், நெட்ஃபிக்ஸ் இல் மட்டும்” என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டது.

இந்த டிரெய்லர் தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.

கண்ணீருடன் மேகன் மார்க்கல்

இந்த டிரெய்லரில் “ஏன் இந்த ஆவணப் படத்தை எடுக்க விரும்பினீர்கள்?” என்ற கேள்வி மேகன் மார்க்கலிடம் கேட்கப்படுவதுடன் தொடங்கிறது.

தொடர்ந்து இளவரசர் ஹரி மற்றும் மேகனின் புகைப்படங்களுடன் இந்த டிரெய்லர் முன்னேறுகிறது.

கண்ணீர் விட்டு கதறிய மேகன் மார்க்கல்: வெளியானது நெட்பிக்ஸ் ஆவணப்படத்தின் டீசர்! | Harry Meghan Markle Drops Tears In Netflix TrailerPrince Harry&Meghan Markle- இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல்(AFP/GETTY)

அப்போது இளவரசர் ஹரியின் குரலில், “மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யாரும் பார்க்கவில்லை, என் குடும்பத்தை பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது” என கூறும் ஓலிகள் வெளிவருகிறது.

மேலும் டிரெய்லரில் மேகன், எங்கள் பங்குகள் அதிகமாக இருக்கும் போது, எங்களிடமிருந்து எங்கள் கதையைக் கேட்பதில் அதிக அர்த்தமில்லையா? என்று தெரிவிக்கிறார்.

அத்துடன் ஒரு காட்சியில் இளவரசர் ஹரி தனது தலையை பின்னால் சாய்த்து கொண்டு உட்கார, இளவரசி மேகன் மார்க்கல்  தனது கண்ணீரை இரு கைகளாலும் துடைப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரி மற்றும் மேகனின் நெருங்கிய நண்பர் மற்றும் வரலாற்று ஆசிரியர் ஓமிட் ஸ்கோபி இந்த ஆவணப்படம் டிசம்பர் 8ம் திகதி ஒளிப்பரப்படும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.