இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா திரைப்படம் மெகாஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இவருக்கும் சூப்பராக கெமிஸ்டிரி வொர்க்அவுட் ஆனதால் சிறுத்தை மற்றும் தோழா ஆகிய திரைப்படங்களில் அடுத்தடுத்து ஜோடியாக நடிக்கத் தொடங்கினர். ஆனால், பையா பட வாய்ப்பு முதலில் தமன்னாவுக்கு செல்லவில்லை. நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என இயக்குநர் லிங்குசாமி முடிவெடுத்து, அவரை அணுகியுள்ளார்.
ஆனால், ஏதோ காரணத்தால் அப்போது அந்த பட வாய்ப்பை தட்டிகழித்துவிட்டார் நயன்தாரா. இது ஏன்? என அப்போது திரைத்துறையில் பேசப்பட்டாலும், முதன்முறையாக நயன்தாரா பையா படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? என்பதை இயக்குநர் லிங்குசாமியே தெரிவித்துள்ளார். அதாவது, நயன்தாராவுக்கு பையா படத்தில் நடிக்க விருப்பம் இருந்தாலும், அவர் கேட்ட சம்பளத்தை அப்போது கொடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சனையால் தான் நடிகை நயன்தாரா பையாவில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க மறுத்தது என்பதையும் அவர் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாராவை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு அண்மையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளை பார்த்துக் கொண்டே சினிமா வேலைகளிலும் இருவரும் பிஸியாக இருக்கின்றனர். அட்லீயின் ஜவான் உள்ளிட்ட பல படங்களில் கமிட்மெண்ட் கொடுத்துள்ளார் நயன்தாரா. விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து தான் அடுத்து இயக்கும் படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.