குப்பை தொட்டியில் கிடந்த சூட்கேஸ்: திறந்த பார்த்த வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!


ஸ்பெயின் பார்சிலோனா நகரத்தில் குப்பை வியாபாரி ஒருவர் தொட்டியில் உள்ள சூட்கேஸில் தலையில்லாத மற்றும் துண்டிக்கப்பட்ட ஆணின் உடல் வீசப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சூட்கேஸில் அடைக்கப்பட்டு இருந்த மனித உடல்

ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள முக்கிய பரபரப்பான வீதியில், தலையில்லாத துண்டாக்கப்பட்ட ஆணின் உடல் சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டு குப்பை தொட்டியில் வீசப்பட்டு இருப்பது காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

குப்பை தொட்டியில் கிடந்த சூட்கேஸ்: திறந்த பார்த்த வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Barcelona Scrap Dealer Finds Headless Human Body(Image: Twitter/324Cat)

நவம்பர் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இந்த கொடூர சம்பவத்தை முதலில் ரோமானிய நாட்டைச் சேர்ந்த ஸ்கிராப் வியாபாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக ஸ்பானிய செய்தி நிறுவனம் El País, தெரிவித்துள்ளது.

ஸ்கிராப் வியாபாரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

வழக்கமாக பார்சிலோனா தெருக்களில் குப்பைகளை சேகரிக்கும் ரோமானிய நாட்டைச் சேர்ந்த ஸ்கிராப் வியாபாரி ஒருவர், நேற்று மாலையில் வழக்கமாக குப்பை சேகரிக்கும் குப்பை தொட்டியை பார்த்த போது அதில் ஒரு சூட்கேஸை தவிர தொட்டி காலியாக இருப்பதை பார்த்துள்ளார்.

குப்பை தொட்டியில் கிடந்த சூட்கேஸ்: திறந்த பார்த்த வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Barcelona Scrap Dealer Finds Headless Human Body(Image: Twitter/324Cat)

சூட்கேஸ் மிகவும் கனமாக இருப்பதை உணர்ந்த ஸ்கிராப் வியாபாரி, அதை திறக்க முடிவு செய்து அதை திறந்து பார்த்த போது, அதில் முற்றிலும் சிதைந்த மனித உடல் எச்சங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே அருகில் உள்ள கடைக்கு ஓடி சென்று, ஆம்புலன்ஸ்க்கு தெரிவித்துள்ளார். அங்கு வந்த மருத்துவ பணியாளர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொலிஸார் விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அதைச் சுற்றியுள்ள பகுதியின் பல புகைப்படங்களை ஆதாரங்களாக சேகரித்தனர்.

குப்பை தொட்டியில் கிடந்த சூட்கேஸ்: திறந்த பார்த்த வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Barcelona Scrap Dealer Finds Headless Human Body(Image: Twitter/324Cat)

மேலும் சூட்கேஸை தொட்டியில் வைத்த நபர்களை அடையாளம் காணும் நம்பிக்கையில், அருகே உள்ள கடைகளில் இருந்து சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.