புதுடில்லி சுனந்தா புஷ்கர்மர்ம மரணம் தொடர்பான வழக்கிலிருந்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, புதுடில்லி போலீசார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
காங்கிரஸ் லோக்சபா எம்.பி.,யான சசி தரூர், சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணை, 2010ல் மூன்றாவது திருமணம் செய்தார். கடந்த, 2014ல் புதுடில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருவரும் தங்கியிருந்தனர்.
அப்போது ஜன., 17 அன்று இரவு, சசி தரூர் அறையில் இல்லாத நேரத்தில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
துாக்க மாத்திரை சாப்பிட்டு, அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.
சுனந்தாவை சசி தரூர் கொடுமைப்படுத்தியதாகவும், தற்கொலைக்கு துாண்டியதாகவும் புதுடில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, புதுடில்லி விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. ஆனால், சசி தரூருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என கூறி, நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்நிலையில், இதை எதிர்த்து போலீசார் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இதை பரிசீலித்த நீதிபதி டி.கே.சர்மா, மனுவின் நகலை சசி தரூரின் வழக்கறிஞருக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டதுடன், விசாரணையை வரும் பிப்., மாதத்துக்கு ஒத்திவைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement