தூக்கத்தை கெடுத்த சேவல் மீது பரபரப்பு புகார்.. நடவடிக்கை எடுத்த போலீஸ்..!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புற்றுநோயியல் மருத்துவர் ஒருவர், பக்கத்துக்கு வீட்டு சேவல் தனது தூக்கத்தை கெடுப்பதாக கூறி சேவல் மீது புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் புற்றுநோயியல் மருத்துவர் அலோக் மோடி. இவர் இரவில் பணியாற்றிவிட்டு விடியற்காலையில் வீட்டில் வந்து உறங்கி வந்துள்ளார். அப்போது, பக்கத்துக்கு வீட்டுக்காரர் வளர்த்து வரும் சேவல் அந்த நேரத்தில் தினமும் கூவுவதால் டாக்டர் தூங்க முடியாமல் அவதிபட்டு வந்துள்ளார்.

சேவல்கள் அதிகாலையியில் கூவுவது இயற்கை என்றாலும் பக்கத்துவீட்டுக்காரர் சேவல் கூவல் சத்தம் அலோக் மோடியை தூங்க முடியாமல் செய்துள்ளது. மேலும், சேவல் காரர் சில நாய்களையும் வளர்த்து வருகிறார். அவைகளும், குரைத்துக்கொண்டு சத்தம் எழுப்பி வந்துள்ளன.

இதனால், அடிக்கடி சேவல் உரிமையாளரிடம் அலோக் மோடி புகார் அளித்து புலம்பி வந்துள்ளார். ஆனாலும், விடியற்காலை வீட்டுக்கு வந்து உறங்க செல்லும் அலோக் மோடியை அந்த சேவல் சத்தம் கடுப்பேற்றி வந்துள்ளது. இதனால் பல நாட்கள் தூக்கமிழந்த அலோக் மோடி இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்துள்ளனர். மேலும், இதில் உடன்பாடு எட்டவில்லை என்றால் பிரிவு 133 (பொது இடையூறு உருவாக்குதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேவல் உரிமையாளரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.