மும்பை: குஜராத் – மும்பை இடையே செல்லும் விரைவு ரயிலான ‘வந்தே பாரத்’ நான்காவதுமுறையாக நேற்று கால்நடைகள் மீது மோதியதில், அதன் முன்பாகம் சேதமடைந்துள்ளது.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில், குஜராத்தின் காந்தி நகருக்கும், மஹாராஷ்டிராவின் மும்பைக்கும் இடையே ஓடுகிறது.
நேற்று குஜராத்தின் உதாவாடா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, குறுக்கே வந்த கால்நடைகள் மீது மோதியது. இதில், ரயிலின் முன்பக்கம் சிறிய அளவில் சேதமடைந்தது. இதனால், ரயில் புறப்பட தாமதம் ஏற்பட்டது.இந்த விபத்தில் கால்நடைகள் இறப்பு குறித்த தகவல் இல்லை.
வந்தே பாரத் ரயில், கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்று முறை கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. நேற்று நான்காவது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement