மூன்று கோவில் யானைகள்: வனத்துறை உரிமைச் சான்றிதழ் காலாவதி!

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் யானை உட்பட மூன்று கோவில் யானைகளுக்கு வனத்துறை வழங்கும் உரிமைச் சான்றிதழ் காலாவதியாகியுள்ளது. ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மற்றும் மடங்களில் சுமார் 24 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய மூன்று கோவில் யானைகளின் நிலை குறித்தும் அதன் சான்றிதழ் குறித்தும் பல்வேறு கேள்விகள் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் பல்வேறு கேள்விகளை முன்வைத்து மதுரை மாவட்ட வனத்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலின் படி மதுரை மாவட்டத்தில் நான்கு கோவில் யானைகள் உட்பட ஏழு யானைகள் பராமரிக்கப்படுகிறது, மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பார்வதி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெய்வானை யானை, கள்ளழகர் திருக்கோவில் கோவில் சுந்தரவல்லி தாயாரின் யானைகள் பராமரிக்கப்படுகிறது,

மேலும், தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டம் 2011 இன் படி வளர்ப்பு யானைகளுக்கு உரிமைச் சான்றிதழ் வனத்துறையால் வழங்கப்படுகிறது, வனத்துறை சார்பாக வழங்கப்படும் உரிமைச் சான்றிதழில் யானையின் எடை வயது, பெயர், உயரம், அதனுடைய உடல்நிலை புகைப்படம் அடங்கி விவரம் இடம் பெற்றிருக்கும்.

மேலும், தமிழ்நாடு முதன்மை தலைமை வனவிலங்கு காப்பாளர் மூலம் வழங்கப்படும் இந்த சான்றிதழ் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான மூன்று கோவில் யானைகளுக்கு உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வளர்ப்பு யானையை பராமரிக்க பத்து நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில் கோவில் யானைகள் இந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

நேற்றைய தினம் புதுச்சேரியில் லட்சுமி யானை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கு உரிய உரிமைச் சான்றிதழ் இல்லாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.